வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா29-ந் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களிலிருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். மேலும் இது சுற்றுலா தளமாகவும் விளங்குகிறது. இந்த ஆலயம் கீழை நாடுகளின் "லூர்து நகர்"என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கட்டப்பட்டு உள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் "பசிலிக்கா "என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்றுள்ள இந்த ஆலயம், வங்க கடலோரம் அமைந்திருப்பது சிறப்பு அம்சமாகும்.
இவ்வாறு பல்வேறு புகழ்பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டு திருவிழா ஆகஸ்ட் மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகி செப்டம்பர் மாதம் 8-ந்தேதி முடிவடைகிறது.இந்த ஆண்டு திருவிழா 10 நாள் கொண்டாடப்படுவது வழக்கம்.அதன் முன்னேற்படாக தற்போது ஆலைத்தை சுத்தம் செய்து சாரம் அமைத்து வர்ணம் பூசி ஆலையம் முழுவதும் அலங்கார மின் விளக்கு பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.