முருகன் கோவில் செல்லும் சாலையில் கோழி கழிவால் துர்நாற்றம்
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோவில் வழியாக செல்லும் சாலை ஓரங்களில் கோழி இறைச்சி போன்ற தேவையில்லா கழிவுப் பொருட்கள் மலை போல குவிந்து கிடக்கின்றன. இதனால் சாலையில் செல்லும் பொழுது துர்நாற்றம் வீசுவதோடு, மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.