வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் திடீராய்வு
ஈரோடு மாவட்டம் காரைவாய்க்கால் பகுதியில் உள்ள காலிங்கராயன் வாய்க்கால் (மைல் 13/7) தொட்டிபாலம் சீரமைப்புப் பணிகளை, தமிழக வீட்டுவசதி மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் சு. முத்துசாமி இன்று (12.03.2026) நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி, ஈரோடு கிழக்கு எம். எல். ஏ வி. சி. சந்திரகுமார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். வாய்க்கால் பாலம் சீரமைப்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.