ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட செல்வி. நந்தினிக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. கந்தசாமி வழங்கினார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் சார்பில் வழங்கப்பட்ட இந்த ஆணையின் மூலம், அவர் பெருந்துறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் / ஊர் நல அலுவலர் (நிலை-2) ஆகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். இந்நிகழ்வில் மாவட்ட நல அலுவலர் கு. மகேஸ்வரி உடனிருந்தார்.