சுரண்டை அரசு கல்லூரியில் 64 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கல்: மாவட்ட ஆட்சியர், எம்.பி, எம்.எல்.ஏ சேர்மன் பங்கேற்பு
சுரண்டை அரசு கல்லூரியில் 64 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கல்: மாவட்ட ஆட்சியர், எம்.பி, எம்.எல்.ஏ சேர்மன் பங்கேற்பு…
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றஅரசு விழாவில் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணிணிவழங்கியதைத் தொடர்ந்து, தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலை மற்றும் அறிவியல்கல்லூரியில் நடைபெற்ற விழாவில் முதற்கட்டமாக 604 கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணிணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல்கிஷோர், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பழனி நாடார் சுரண்டை நகர்மன்ற தலைவர் எஸ்.பி.வள்ளி முருகன் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.
தென்காசி மாவட்டம், சுரண்டை காமராஜர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்றுநடைபெற்ற அரசு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல்கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்ராணிஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற
உறுப்பினர் . எஸ்.பழனி நாடார், சுரண்டைநகர்மன்ற தலைவர் எஸ்பிவள்ளி முருகன் ஆகியோர் கலந்து கொண்டு முதற்கட்டமாக 604 கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணிணியை வழங்கினார்கள்.
தென்காசி மாவட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் அரசு
தொழிற்பயிற்சி நிலையங்களைச் சேர்ந்த 3503 கல்லூரி மாணவ மாணவியர்களுக்குமடிக்கணிணி வழங்கப்படவுள்ளது.அதனடிப்படையில் முதற்கட்டமாக இன்றைய தினம் 604 கல்லூரிமாணவ, மாணவியர்களுக்குமடிக்கணிணி வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல்கிஷோர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு.தண்டபாணி,மாவட்ட சமூகநல அலுவலர் மதிவதனா, சுரண்டை காமராஜர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிமுதல்வர் முனைவர் கணேசன், மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.