பெண்கள் ஓட்டுநர்களுக்கான முதலுதவி விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெண்கள் ஓட்டுநர்களுக்கான முதலுதவி விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சிராப்பள்ளி புனித சிலுவை கல்லூரி (தன்னாட்சி), பாரதிதாசன் பல்கலைக்கழக இணைப்பு பெற்றதும், UGC நிதியுதவி பெறும் மகளிர் மையம் சார்பில், “E-Auto Women Drivers’ First Aid Kit: Your Roadside Safety Companion” என்ற தலைப்பில் பெண்கள் இ-ஆட்டோ ஓட்டுநர்களுக்கான முதலுதவி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சி 11.12.2025 (வியாழக்கிழமை) காலை 11.00 மணிக்கு நடைபெறுகிறது. சாலைப் பாதுகாப்பு, அவசர காலங்களில் முதலுதவி வழங்கும் முறைகள், பெண்கள் ஓட்டுநர்களின் பாதுகாப்பு மற்றும் தன்னம்பிக்கை வளர்ச்சி ஆகியவை குறித்து இந்நிகழ்ச்சியில் விளக்கமளிக்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு புனித சிலுவை கல்லூரி (தன்னாட்சி) முதல்வரும் மகளிர் மைய இயக்குநருமான மதிப்பிற்குரிய ரெவ். (Sr.) டாக்டர் ராஜகுமாரி. ப அவர்கள் தலைமை தாங்குகிறார்.
இந்நிகழ்ச்சியை டாக்டர் ப. பிரிஷீலா, உதவிப் பேராசிரியரும் ஒருங்கிணைப்பாளருமான, மகளிர் மையம் (UGC நிதியுதவி), புனித சிலுவை கல்லூரி (தன்னாட்சி), திருச்சிராப்பள்ளி அவர்கள் ஒருங்கிணைத்து நடத்துகின்றார்.
பெண்கள் இ-ஆட்டோ ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் நடைபெறும் இந்நிகழ்ச்சி, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் முக்கிய முயற்சியாக அமைந்துள்ளது.