புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுக்கா பொன்பேத்தியில் T.A.75 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் லிட் விவசாயிகள் பயன் பெரும் வகையில் செயல் பட்டு வருகிறது. இந்த நிலையில் விவசாயிகள் பயன் பெரும் வகையில் விவசாய கடன் பெறுவது வழக்கம். ஆனால் இது தனக்கு மிகவும் வேண்டப்பட்ட வர்களுக்கு மட்டுமே வழங்குவதாக விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக முதல்வர் அலுவலகம் வரை புகார் அனுப்பி உள்ளனர் முதல்வர் அலுவலகம் விளக்கம் கேட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி உள்ளனர். இதில் நடக்கும் மர்மம் என்ன ? இரண்டு நாட்களே உள்ள நிலையில் அனைத்து ஆதாரங்களையும் கொடுத்து எங்கலை உறுப்பினராக சேர்த்து விவசாய கடன் வழங்க வில்லை என்றால் தனி நபர் அதிகாரிகள் வைக்கும் கோரிக்கைக்கு தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் நியாயமான உண்மையான கோரிக்கைதாணா என நன்கு பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை கோரிக்கையாக கூறுகின்றனர் . தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் நியாயமான நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் விவசாயிகளை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்த போவதாக குற்றம் சாற்றுகின்றனர்.