திருச்சியில் சொந்த தாத்தாவே 14 வயது பேத்தியை பாலியல் வன்கொடுமை....
திருச்சி இனாம்குளத்தூரை சேர்ந்த மீனாட்சி என்பவர் சித்தாள் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 1 ஆண் பிள்ளையும் 1 பெண் பிள்ளையும் உள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் உடல் அசதியாக உள்ளது என்று மாணவி வீட்டில் இருந்துள்ளார். தனது மகளை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் அவர் தாய் மீனாட்சி. அங்கு பரிசோதித்த மருத்துவர் பாதிக்கப்பட்ட சிறுமி 11 வாரம் கர்ப்பமாக இருப்பதாக கூறினார். சிறுமியிடம் கர்ப்பத்திற்கு காரணம் யார் என்று கேட்டபோது 65 வயதான தனது தாத்தா பெருமாள் என்றும் சம்பவ நாளில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை எதிரி கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டதாகவும், இதை பற்றி யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவேன் என மிரட்டடியதாகவும் இதே போல் தொடர்ந்து கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டதாகவும் கூறப்படுகிறது.இதனால் 14 வயது மதிக்கத்தக்க சிறுமி 11 வாரம் கர்ப்பமாக உள்ளதாகவும், தற்போது அரசு பொதுமருத்துவமனை திருச்சியில் சிகிச்சையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் ஜீயபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.