நாகப்பட்டனத்தில் ரூ.60 லட்சம் மதிப்பிலான 120 கிலோ கஞ்சா பறிமுதல் – 6 பேர் கைது
ரூ.60 லட்சம் மதிப்பிலான 120 கிலோ கஞ்சா பறிமுதல் – 6 பேர் கைது
நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை வாய்மேடு காவல் நிலையம் 25.08.2026
நாகப்பட்டினம் மாவட்டம், வாய்மேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தானிக்கோட்டகம் சோதனைச் சாவடி அருகே, வாய்மேடு காவல் நிலையம் ஆய்வாளர் V.பாரதிதாசன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வாய்மேடு காவல் நிலைய போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆந்திராவிலிருந்து இலங்கைக்கு கடத்திச் செல்லும் நோக்கில் கொண்டு வரப்பட்ட சுமார் ரூ.60 லட்சம் மதிப்பிலான 120 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 நான்கு சக்கர வாகனங்கள், 6 செல்போன்கள் மற்றும் 2 மோடம்கள் கைப்பற்றப்பட்டன.
இச்சம்பவம் தொடர்பாக கீழ்க்கண்ட 6 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்:
கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, யாருக்கு அனுப்பப்பட இருந்தது மற்றும் இக்கடத்தலில் தொடர்புடைய பிற நபர்கள் குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் நோக்கில், போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை தொடர்ந்து கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.