முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி யின் பிறந்தநாளை முன்னிட்டு
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி யின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பில் மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகில் இனிப்பு வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. விழாவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் திரு B.சரவணகுமார் தலைமை வகித்தார் இதில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயலாளர் திருமதி M.அஷ்டலக்ஷ்மி மற்றும் தொழிலாளர் யூனியன் மகளிர் அணி தலைவி திருமதி S.ரோஸினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் SJ.சைமன் பல்தே சிங் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் நிர்வாகிகள் முருகன், விமல், தார்னேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.