தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை சார்பாக தமிழிசை நிகழ்ச்சி திருத்தலங்களில் நடத்தப்பட்டு வருகிறது அதனை அனுசரித்து நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்காவில் தமிழிசை 2026 நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் நாகூர் தர்காவில் பணிபுரியும் இசைக் கலைஞர்கள் நாதஸ்வரம் மேளதாளம் நகரா இசைக்க விழா நிகழ்வு துவங்கியது பின்னர் இஸ்லாமிய பாடல்கள் பாடும் இசை கச்சேரி நடைபெற்றது இறுதியாக சூபி இசைக் கலைஞர்களின் தப்ஸ் இசை நிகழ்ச்சி நடைபெற்று பெரும் வரவேற்பை பெற்றது.
நாகூர் தர்காவில் பணிபுரியும் இசை கலைஞர்களுக்கு இசை கலைஞர்கள் வாரிய உறுப்பினர் அட்டை விரைவாக வழங்கப்படும் என்றும் அவர்களுக்கான சலுகைகள் வழங்கப்படும் என்றும் பண்பாட்டு மைய உதவிய இயக்குனர் அறிவித்தார்.
நாகூர் தர்காவில் சமூக நல்லிணக்கத்திற்காக மத ஒற்றுமைக்காக தினமும் வாசிக்கப்படும் நாதஸ்வர மேளதாளங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது மேலும் தமிழ்நாடு அரசு மதுரை இசை சங்கம் நாகூர் தர்கா நகர இசையை அங்கீகரித்து 1965ம் ஆண்டு அரசு விருது பெற்ற தருணங்கள் நினைவு கூறப்பட்டது.
தமிழ்நாடு அரசின் தமிழிசை நிகழ்ச்சி நடத்தப்படும் முதல் இஸ்லாமிய ஸ்தலம் என்ற பெருமையை நாகூர் தர்கா பெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் இராஜா ராமன் தலைமை தாங்கி நடத்தினார். நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் ஹாஜா நஜி சமுதீன் சாஹிப் முன்னிலை வகித்தார், தர்கா பரம்பரை அறங்காவலர், ஆலோசனை குழு தலைவர் செய்யது முகமது கலிபா சாஹிப் வரவேற்புரை வழங்கினார். நாகூர் தர்கா பரம்பரை அறங்காவலர் சுல்தான் கலிபாஸாகிப் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர் செய்து அப்துல் காதர் சாகிர் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு அரசு சார்பில் நாகூர் தர்கா நிர்வாகிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.