நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சைபர் குற்றங்கள் குறித்து மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு
தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குநர் அவர்களின் உத்தரவின்படியும், சென்னை சைபர் கிரைம் பிரிவு காவல் கண்காணிப்பாளர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கேழ்கர் சுப்ரமணிய பாலச்சந்திரா, இ.கா.ப. அவர்களின் அறிவுரையின்படியும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. K.K. பாலச்சந்தர் அவர்கள் தலைமையில், நாகப்பட்டினம் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பில் சர் ஐசக் நியூட்டன் கல்லூரி மாணவ, மாணவியருக்கு சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் செல்போன் மற்றும் சமூக வலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்துதல், OTP மோசடிகள், போலி செயலிகள் மூலம் கடன் மோசடி, போலி வேலைவாய்ப்பு, வங்கி மோசடி, Part Time Job Fraud, Scholarship Scam, Task Job Fraud, Digital Arrest, FedEx Scam மற்றும் Cyber Slavery போன்ற இணையவழி குற்றங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், சைபர் குற்றங்களிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், சைபர் குற்றம் தொடர்பாக உடனடியாக 1930 உதவி எண்ணை தொடர்புகொள்வது மற்றும் www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.