மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிதியளிப்பு விழா....
நாகப்பட்டினத்தில் நடந்த நிதியளிப்பு விழாவில் பங்கேற்க
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் நேற்று வந்தார். அப்போது நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி ஒழுங்காற்று குழுவோ, காவிரி மேலாண்மை ஆணையத்தின் தீர்மானத்தின் அடிப்படையில், விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட கர்நாடகா மறுத்துள்ளது. தொடர்ந்து 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் இறுதியாக ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை எதிர்த்து கர்நாடக அரசு தடை உத்தரவு கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடந்த மாதம் இறுதியில் மழை பொழிவு இல்லாதால் கர்நாடகவில் தண்ணீர் இல்லை என்று சொன்னார்கள். ஆனால் தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதியில் அதிக மழை பெய்த காரணமாக கர்நாடகாவில் உள்ள அனைத்து அணைகளும் நீர் நிரம்பி உள்ளது. ஆனாலும் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுத்து வருகிறது. இந்த அளவுக்கு தமிழகத்தை வஞ்சிக்கும் அளவிற்குதான் கர்நாடகா அரசு செயல்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை குழுவின் முடிவை அமல்படுத்த வேண்டிய ஒன்றிய அரசும் அதை பற்றி கவலைப்படாமல் உள்ளது. தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம் என்று கூறி வருவது ஏற்புடையதாக இருக்காது. உடனடியாக தண்ணீர் திறப்பதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை தமிழக முதல்வர் எடுக்க வேண்டும்.
அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும். அனைத்து எம்பிகளுடன் பிரதமரை சந்தித்து, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியை எடுத்துக்கூறி, உடனடியாக தண்ணீர் திறக்க உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து சட்டநடவடிக்கை என்பது வேறு. கர்நாடகா அரசை கட்டாயப்படுத்தி, தண்ணீர் உடனடியாக திறக்க வைக்க வேண்டும்.
குறுவை சாகுபடி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது சம்பந்தமாக சட்டசபையுலும் வலியுறுத்தி உள்ளோம். குறுவையால் பாதிக்கப்பட்ட ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம், விவசாய கூலி தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிவாரணம் கிடைக்கவில்லையென்றால் சம்பா சாகுபடியைக் கூட மேற்கொள்ள முடியாத நிலை உருவாகும்.
கர்நாடக அரசு உடனடியாக தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும். ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறுவை பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைளை வலியுறுத்தி வரும் 20ம் தேதி நாகப்பட்டினத்தில் மார்க்ஸ்சிட் கம்யூனிஸ்ட்
கட்சி சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
நேற்று முன்தினம் பாராளுமன்ற கூட்டம் நிறைவு பெற்றுள்ளது. இந்திய ஜனநாயகத்தை பாஜ எவ்வளவு மோசமாக சீர்குலைக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. பாராளுமன்ற கூட்டத்தை தொடர்ந்து நியாயமான முறையில் நடத்தாமல், எதிர்க்கட்சி குரலுக்கு வலிமைப்படுத்தாமல், ஒரு விசாரணை நடத்தி, மாணவர்கள் மீது தடியடி, துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து, ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தை முடக்கிய பாஜகவை கண்டிக்கிறோம். எனவே சிறப்பு நாடாளுமன்றம் கூட்டத்தை நடத்தி தொகுதி மறுவறை சட்டத்தை நிறைவேற்ற போகிறோம் என்ற செய்தி ஏற்கனவே வெளியாகி உள்ளது. ஒன்றிய அமைச்சரே இதுபோல் பேசி உள்ளார். ஆனால் சமீபத்தில் பேசிய ஒன்றிய அமைச்சர், அதுபோல் சிறப்பு கூட்டம் ஏதும் நடத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, பாஜக கொண்டு வரும் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதமாக உயர்த்துவோம் என்ற யோசனையை நாங்கள் ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளோம். தமிழக சட்டசபையில் தொகுதி மறு வரையறை சம்பந்தமான தீமானமும் அனைத்து கட்சிகள் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தை நடத்தினாலும், அந்த மசோதா நிறைவேறாது என்பதால்தான் கூட்டத்தை ரத்து செய்துள்ளனர். எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தக்கூடாது.
543 என்ற எண்ணிக்கை அப்படியே தொடர வேண்டும். 33 சதவீதம் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மத்தியில் ஆளும் பாஜக அரசு நயவஞ்சமாக செயல்பட்டு வருகிறது. டிசம்பர் மாதத்திற்குள் நாடாமன்றத்தை கூட்டி, 543 என்ற எண்ணிக்கை தொடர்வதுடன், 25 ஆண்டுகளுக்கு இது மாற்றப்படாது என்ற ஒரு சட்டத்திருத்தத்தை கொண்டு வந்தால் மட்டுமே, தற்போது உள்ள எண்ணிக்கையை பாதுகாக்க முடியும் என்றார்.