திருச்சியில் பிஜேபி கட்சி சார்பில் பொங்கல் விழா அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு
திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று (5-1-2026) நடைபெறும் நம்ம ஊரு மோடி பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தந்துள்ளார்.
அங்கு 1,008 பொங்கல் பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டுள்ளது. அதனை பார்வையிட்டு அமித்ஷா மேடையில் பொங்கல் வைத்து கொண்டாடினார். உடன் அமைச்சர் எல்.முருகன், மாநிலத் தலைவர் நைனா நாகேந்திரன் மற்றும் திருச்சி கட்சி பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் ஏராளமானார் கலந்து கொண்டனர்.