இலத்தூரில் தமிழக வெற்றிக் கழகம் செங்கோட்டை கிழக்கு ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா : நியாஸ் பங்கேற்பு
இலத்தூரில் தமிழக வெற்றிக் கழகம் செங்கோட்டை கிழக்கு ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா : நியாஸ் பங்கேற்பு
தென்காசி மாவட்டம் தமிழக வெற்றி கழகத்தின் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட செங்கோட்டை கிழக்கு ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா இலத்தூரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தென்காசி மேற்கு மாவட்ட கழக செயலாளர் N. நியாஸ் NJSR செங்கோட்டை கிழக்கு ஒன்றிய அலுவலகத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் குத்து விளக்கு ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளருக்கு ஒன்றிய கழக செயலாளர் ட. பரமசிவன் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.
இந்த விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட இணைச் செயலாளர் முத்தையா, துணை செயலாளர் மாரிமுத்து, மாவட்ட கழக பொருளாளர் VTA சிவசங்கர், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் மருத்துவர் வாசுதேவி, தொண்டர் அணி அமைப்பாளர் காந்தி, மாவட்ட நிர்வாகி எஸ். வேல்துரை, மாவட்ட நிர்வாகி மணவாளன், செங்கோட்டை ஒன்றிய இணைச் செயலாளர் SHARPராஜா, நகர நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நான்கு முக்கு ரோடு சந்திப்பில் இருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த மேற்கு மாவட்ட செயலாளர் நியாஸ்க்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் ட. பரமசிவன் தலைமையில் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் மேள தாள முழங்க பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவின் நிறைவில் பங்கேற்ற அனைத்து கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு சிறப்பான மதிய விருந்து வழங்கப்பட்டது.