காங்கிரஸ் பேரியக்க துவக்க நாளை முன்னிட்டு தியாகி அருணாச்சல மன்றத்தில், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் - மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கு. செல்வப்பெருந்தகை மகாத்மா காந்தி சிலை மற்றும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தி, புதுப்பிக்கப்பட்ட கொடிமரத்தில் காங்கிரஸ் பேரியக்க கொடி ஏற்றி, காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் 25 நபர்களுக்கு, பெருந்தலைவர் காமராஜர் விருதுகள் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மாநில தலைவர் திருக்கரங்களால், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் 2026 காலண்டர் வெளியிடப்பட்டது. பின்னர் நிர்வாகிகள் அடையாள அட்டை வழங்கி, கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு இனிப்புகள் அனைவருக்கும் பகிரப்பட்டது.
நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் கிறிஸ்டோபர் திலக், மாநில பொதுச்செயலர் பெனட் அந்தோணிராஜ், மாவட்ட பொருளாளர் முரளி, வடக்கு மாவட்ட தலைவர் கலை, முன்னாள் மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ், சரவணன், கே ஆர் ராஜலிங்கம், கோட்ட தலைவர்கள் மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, ஸ்ரீரங்கம் ஜெயம் கோபி, திருவனைக்கோவில் தர்மேஷ், மார்க்கெட் பகதூர்ஷா, அரியமங்கலம் அழகர், காட்டூர் ராஜா டேனியல் ராய், ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், உறையூர் பாக்யராஜ், சுப்ரமணியப்புரம் எட்வின், வரகனேரி இஸ்மாயில், புத்தூர் மலர் வெங்கடேஷ், தில்லைநகர் ராகவேந்திரா, அணி தலைவர்கள் மகிளா காங்கிரஸ் ஷீலா செளஸ், அஞ்சு, முன்னாள் ராணுவ பிரிவு ராஜசேகர் , அமைப்பு சாரா பிரிவு மகேந்திரன், இளைஞர் காங்கிரஸ் விஜய் பட்டேல், ஜோன்ஸ், ஆர்டிஐ பிரிவு கிளமென்ட், நெசவாளர் பிரிவு சேகர், ஊடக பிரிவு செந்தில், ஜாவஹர் பால் மன்ச் எபினேசர்,இலக்கியபிரிவு பத்பநாபன், கலைபிரிவு அருள், எஸ்சி பிரிவு கலியபெருமாள், சிறும்பான்மை பிரிவு மொய்தின், மனித உரிமை பிரிவு ஆறுமுகம், நிர்வாகிகள் மும்தாஜ், சரவணன், விவேக், பாண்டியன், சரவணன், கண்ணன், அனந்த பத்பநாபன், ஜெனிபர், செல்வராஜ், மகேஷ், ரவிச்சந்திரன், ஆரிப், உறந்தை செல்வம், சோபியா, ஜெயப்ரியா, வார்டு தலைவர்கள், மூத்த நிர்வாகிகள் பலர் திரளாக கலந்துகொண்டனர்.