யார்? அந்த சார்? பதாகை ஏந்தி நின்ற அதிமுக சீனிவாசன்
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து யார் அந்த சார்? என்ற முழக்கத்துடன்
அதிமுக பொதுச் செயலாளர் தலைமையில் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. FIR வெளியான "யார் அந்த சார்?" என்ற கேள்வியானது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவம் அரங்கேறி ஒரு வருடம் கடந்த நிலையில் "யார் அந்த சார்?" என்ற கேள்விக்கு இன்று வரை விடை கிடைக்காமல் உள்ளது. இதை குறிக்கும் அதனை குறிக்கும் விதமாக திருச்சி தில்லை நகரில் உள்ள மாநகர மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில், தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் "யார் அந்த சார்?" கண்டன கேள்விகளுடன் கூடிய பதாகைகளை ஏந்தி கேள்வி எழுப்பினர். தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வெங்கட் பிரபு ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் எம்.மணிகண்டன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்