நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை- போதைப் பொருள் அழிப்பு...
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2,485.616 கிலோ குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் அழிப்பு
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேழ்கர் சுப்ரமண்ய பாலச்சந்திரா, உத்தரவின்படி, மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 31 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2,485.616 கிலோ கிராம் எடையுள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நீதிமன்ற உத்தரவின்படி இன்று 11.08.2026 பாதுகாப்பான முறையில் பூமியில் புதைத்து முற்றிலும் அழிக்கப்பட்டன.
தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களின் சட்டவிரோத பயன்பாடு மற்றும் விற்பனையைத் தடுக்க நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.