புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கீழையூர் ஊராட்சி மலையடிப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய ஊழல் முறைகேடுகள்... கண்டு கொல்வாரா அமைச்சர்..?
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கீழையூர் ஊராட்சி மலையடிப்பட்டி என்ற கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது இந்த பள்ளியின் பெற்றோர் சங்க தலைவர் செயல்படுகிறார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது அவர் செயல்படுவதை தடுப்பது தலைமை ஆசிரியரா அல்லது மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளா.
மலையடிப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு மளிகை சாமான்கள் காய்கறிகள் இன்னும் அந்த பள்ளி சம்பந்தமாக வாங்கக்கூடிய இதர பொருள்கள் இதெல்லாம் வரவு எந்த வங்கியில் வைக்கப்படுகிறது தலைமையாசிரியர் சரியாக செயல்படுகிறார்.
மலையடிப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி க்கு பாத்தியப்பட்ட 183/14 ல் ஒன்பது ஏக்கர் இடம் உள்ளது அந்த இடத்தை வருவாய்துறை சார்ந்த சர்வேயர் அகமத் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உமா மகேஸ்வரி ஆகியோர் பள்ளியின் தலைமை ஆசிரியர் முன்னிலையில் அளந்த அத்து காட்டி இருக்கிறார்கள் இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் முறைப்படி மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் வைத்து 9 ஏக்கர் இடத்தை முள்வேலி அமைத்திட வேண்டுகிறேன் என்று ஒரு கடிதம் அனுப்பி இருக்க வேண்டும்.
பள்ளிக்கு வரும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முறையாக பாடம் நடத்துகிறார்களா? அந்த பள்ளிக்கு வாங்கக்கூடிய உணவு சம்பந்தப்பட்ட பொருட்கள் எந்த வங்கி வரவு கணக்குகளில் வைக்கப்படுகிறது எப்படி வவுச்சர் போட்டு எடுக்கிறார்கள் என்பதெல்லாம் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் வருவதில்லை. முந்தைய திமுக ஆட்சியில் அளவுக்கு அதிகமாக ஊழல் முறைகேடுகள் நடந்தது அதேபோல முறையீடுகள் இந்த ஆட்சியிலும் நடக்கிறது ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை வேறு ஒரு தலைமை ஆசிரியர் அமைக்க வேண்டும் அதுவும் நேர்மையாக செயல்படுகிற தலைமை ஆசிரியர் நியமிக்க வேண்டும்.
இப்போதிருக்கும் பெற்றோர் சங்கத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சரியாக செயல்படுகிறார்களா என்பதை பார்த்து அவர்களையே பதவியில் நீடிக்கு வைக்க வேண்டும் அப்படி சரியாக செயல்படவில்லை என்று சொன்னால் இந்த பெற்றோர் சங்கத்தை கலைத்து விட்டு மீண்டும் ஒரு தேர்தல் போல வைத்து பெற்றோர் சங்க தலைவரை உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும்.
மேற்படி கோரிக்கைகளை முந்தைய திமுக ஆட்சியில் நிறைவேற்றவில்லை ஊழல் முறையீடுகளை தவறுகளை அட்டூழியங்களை வேடிக்கை பார்த்தார்கள் ஆனால் இன்றைய ஆட்சியில் இருக்கக்கூடிய கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு ராஜ்மோகன் அவர்கள் நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…