சதர்ன் இரயில்வே பென்ஷனர்ஸ்' சங்கம்-பொன்மலையின் 42-வது ஆண்டு நிறைவு விழா
06-08-2026-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை பொன்மலை ஆர்மரிகேட் அருகில் உள்ள டாக்டர். அம்பேத்கார் இரயில்வே மக்கள் மன்றத்தில் நடைபெற்ற சதர்ன் இரயில்வே பென்ஷனர்ஸ்' சங்கம்-பொன்மலையின் 42-வது ஆண்டு நிறைவு விழாவும் மற்றும் 2025-26 ஆம் ஆண்டின் பொது மகாசபைக் கூட்டத்தில் சங்க தலைவர் T.S.கணேஷ் தலைமையில்,
செயல் தலைவர் வெங்கடேஷன், இனண செயலாளர்கள் பழனிவேல், சம்பந்தம், கருப்பையா, நாகராஜன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
விழாவில் ஆண்டறிக்கை மற்றும் வரவேற்புரை செயலாளர் P.ராமசாமி உரையாற்றினார்.
வரவு, செலவு கணக்குகளை பொருளாளர் எம்.மகேந்திரன் வாசித்தார்.
விழாவிற்கு பொன்மலை ரயில்வே பணிமனைஉயர் அதிகாரிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.
18 தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது.
விழாவிற்கு அப்துல் அலீம், ஐனார்த்தனராஜீ,சண்முகம், கேசவன், நமசிவாயம், முருகானந்தம், கே.சி.நீலமேகம், பழனிச்சாமி, இராமச்சந்திரன், பொன்னுதுரை, சாம்சன் போஸ், ஸ்ரீதரன் மற்றும் 300 மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டார்கள்.
முடிவில் உதவி செயலாளர் ஏ.வைகுண்ட முர்த்தி நன்றி கூறினார்.