நடவடிக்கை எடுக்குமா புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்? கண்டு கொள்வாரா தமிழக முதல்வர்?
அறந்தாங்கி அருகே அரசு இடத்தில் மண்டபம் கட்ட அனுமதி கொடுத்த அதிகாரிகள் யார்? புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி வருவாய் கிராமம். கோபால பட்டினத்தில் அரசு ஆரம்பப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 250 ஏழைகுழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த கிராமத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் ஆரம்பப் பள்ளிக்கு அருகே திருமண மண்டபம் கட்டுவதாக கூறப்படுகிறது. இந்த கட்டிடம் கட்ட ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும் இந்த மண்டபத்திற்கு எந்த ஒரு அனுமதியும் வாங்கவில்லை என கூறப்படுகிறது. இது சம்பந்தமாக ஜமாத் தலைவரிடம் கேட்டதற்கு பள்ளிக்கூடத்திற்கும் மண்டபத்திற்கும் எந்த ஒரு இடையூறும் இல்லை என விளக்கம் அளித்தார். செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளரை நாம் தமிழர் நிர்வாகி இப்ராகிம் செய்தியாளரை என்ன செய்கிறேன் பார் என்று மிரட்டி வருகிறாராம். அரசு இடத்தில் மண்டபம் கட்டுவதே தவறு. அதுவும் பள்ளிக்கூடம் அருகில் கட்டுவது மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது கூடவா தெரியாது. இதனை தவிர்க்காமல் செய்தியாளர்களை மிரட்டுவது தாய் உறவுகள் என்று கூறும் நாம் தமிழர் கட்சிக்கு அழகா...?. உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு அதிகாரிகளிடம் தகுந்த ஆதாரங்களை வாங்கி சரியான தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர். சிறப்பாக செயல்படும் தொகுதி அமைச்சர் அவர்கள் இதில் கவனம் செலுத்தி பாதிக்கப்படும் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும். நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்? கண்டு கொள்வாரா தமிழக முதல்வர்?
சிவா@கென்னடி தலைமை செய்தியாளர். செய்திகள் விளம்பர தொடர்புக்கு 9443592514. 8489170514