திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டம், எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திருச்சி - திண்டுக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இன்று 04.06.2026 மதியம் 1.00 மணியளவில் திருச்சிராப்பள்ளி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர் ஆகியோர் வாகன சோதனை மேற்கொண்டபோது ரோகிணி கேட்வே அருகில் TN76 U0280 என்ற பதிவெண் கொண்ட டிப்பர் லாரியில் உரிய அரசு அனுமதியின்றி சுமார் 4 யூனிட் அளவுள்ள ஆற்று மணல் இருந்தது தெரியவந்தது. மேற்காணும் வாகனம் கைப்பற்றப்பட்டு எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதில் தொடர்புடைய நபர்கள் மீது எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.