உதகை அருகே குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிந்த பிணந்தின்னிக் கழுகு மீட்பு.
உதகை அருகே முதுகில் GPS சிப், காலில் அடையாள குறியீட்டு வளையத்துடன் குடியிருப்பு பகுதியில் சுற்றி வந்த பிணந்தின்னிக் கழுகு, பிடிக்கப்பட்டு சீகூர் வனப்பகுதியில் விடப்பட்டது.
வனத்துறையினர் நடத்திய விசாரணையில், மும்பையில் உள்ள BNHS என்ற வன உயிர் ஆய்வு நிறுவனம் ஆய்வுக்காக பறக்க விட்டுள்ளது தெரியவந்தது.