ராஜபாளையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி!
ராஜபாளையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் போக்குவரத்து காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது முன்னதாக சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது பேரணியை
வட்டார போக்குவரத்து அலுவலர் எம். சந்திரசேகரன், கொடியசைத்து துவக்கி வைத்தார் மோட்டார் வாகன ஆய்வாளர் பி. கண்ணன் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் சீமான் (டவுன்) வள்ளியம்மாள்( நெடுஞ்சாலை) கன்ஸ்யூமர் கவுன்சில் மாநில தலைவர் எஸ். சுப்பிரமணியம், உள்பட பலர் பங்கேற்றனர். பேரணி ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானாவில் இருந்து துவங்கி பஞ்சு மார்க்கெட் வரை சென்று முடிவடைந்தது. என்.ஏ. மஞ்சம்மாள் பாலிடெக்னிக் மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியபடி பங்கேற்றனர்.