ரோட்டரி மாவட்டம் 3000 சார்பில் நடமாடும் இரத்த தான வாகனம் உயிர்த்துளி இரத்த மையத்திற்கு வழங்கல்
ரோட்ரோட்டரி மாவட்டம் 3000 சார்பில் நடமாடும் இரத்த தான வாகனம் உயிர்த்துளி இரத்த மையத்திற்கு வழங்கல்.டரி மாவட்டம் 3000 சார்பில் நடமாடும் இரத்த தான வாகனம் உயிர்த்துளி இரத்த மையத்திற்கு வழங்கல்.
மனிதநேய சேவையில் முன்னணியில் செயல்பட்டு வரும் ரோட்டரி மாவட்டம் 3000 சமூக நலன் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன், சென்ற வருட ஆளுநர் ரோட்டரியின் ராஜா கோவிந்தசாமி தலைமையில், வருங்கால ஆளுநர் ரோட்டரியின் ஆர்.பி.எஸ் மணி வழிகாட்டுதலுடன்,
ரோட்டரி இன்டர்நேஷ்னல் மானியம் மற்றும் ரோட்டரியின் ஏ.கே.எஸ் டாக்டர் சீனிவாசன் அவர்களின் நேரடி நிதி மூலமும் வாகனத்தை கட்டமைத்து திருச்சியில் உள்ள உயிர்த்துளி இரத்த மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு அதிகாரப்பூர்வமாக, இன்று ஒப்படைக்கப்பட்டது. இந்த வாகனம் மூலம் நகர்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் இரத்த தான முகாம்களை எளிதாக நடத்த முடியும். அவசர காலங்களில் தேவையான இரத்தத்தை விரைவாக சேகரித்து உயிர்களை காக்கும் முக்கிய சேவையாக இது செயல்படும்.
ரோட்டரி மாவட்டம் 3000 சமூக சேவையில் தனது அர்ப்பணிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. இந்த நடமாடும் இரத்த தான வாகனம் மனித உயிர்களின் மதிப்பை உணர்த்தும் ஒரு முக்கிய முயற்சியாகவும், சுகாதார துறைக்கு பெரும் துணையாகவும் அமையும் என மாவட்டம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் ரோட்டரி மாவட்டம் 3000-தின் வருங்கால ஆளுநர்கள் ரோட்டரியின் லியோ பெலிக்ஸ் மற்றும் ரோட்டரியின் மீனா சுப்பையா ஏர்.ஆர்.எப்.சி டாக்டர் ஜமீர் பாட்ஷா, டி.ஆர்.எப்.சி ரோட்டரியின் கண்ணன் ஆகியோர் பங்கு கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டு பேசிய உயிர்த்துளி இரத்த மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர். பிரபாகரன், இந்த சேவை முயற்சிக்கு உறுதுணையாக இருந்த ரோட்டரியின் ஏ.கே.எஸ் டாக்டர் சீனிவாசன், முன்னால் ஆளுநர் ரோட்டரியின் ராஜா கோவிந்தசாமி, வருங்கால ஆளுநர் ரோட்டரியின் ஆர்.பி.எஸ் மணி மற்றும் ரோட்டரியின் இன்டர்நேஷ்னல் அமைப்பிற்கும் தனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொண்டு விடைப்பெறுகிறேன்.
இந்த நடமாடும் இரத்த வங்கிக்கு முதன்மை தொகுப்பாளராக ரோட்டரியன் சுபா பிரபு, இரண்டாம் தொடர்பாளராக ரோட்டரியன் முகமது தாஜ் இணைந்து இந்த Global grant உலக நிதி நிறுவனத்தில் இந்த திட்டத்திற்கு தேவையான தொகையை பெற்றுத்தந்தனர்.
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு கம்பரசம்பேட்டை காவேரி ஆற்றுபகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமை நீரேற்று நிலையத்தின் மூலம் குடிநீர் வழங்கும் பணியினை தொடங்கி வைத்தார்