தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி தெற்கு நாட்டாணிக்கோட்டையில் சௌ.சீனிவாச அய்யங்கார் நினைவாக, பசுமை கோட்டை சமூக நல அமைப்பு மற்றும் கிராமத்தார்கள் சார்பில், மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து, மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், தி.மு.க சேதுபாவாசத்திரம் மேற்கு ஒன்றியச் செயலாளர் குழ.செ.அருள்நம்பி முன்னிலை வகித்தார்.பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், இளைஞர் அணி ஏ.பிரவீன் ஆனந்த், குருவிக்கரம்பை ஆடிட்டர் ஜீவானந்தம், காங்கிரஸ் கட்சி எம்.சேக் இப்றாம்ஷா, கழனிவாசல் பார்த்திபன் மற்றும் கிராமத்தினர், இளைஞர்கள் கலந்து கொண்டனர். கிராம பொது இடங்கள், குளக்கரை உள்ளிட்ட இடங்களில் மா, பலா, கொய்யா, வேம்பு, புங்கன், தேக்கு என பல வகையான 500 மரக்கன்றுகள் நடப்பட்டன.