விருதாச்சலத்தில் வந்தே பாரத் ரயில் நிறுத்தம் எம்.பி க்கு பாராட்டு!!
விருத்தாசலத்தில் வந்தே பாரத் இரயில் நிறுத்தம் வர்த்தக சங்கம் சார்பில் எம்.பி.க்கு பாராட்டு!
விருத்தாசலம் நகர அனைத்து வர்த்தகர்கள் நல சங்கம் சார்பில் எம்.பிக்கு பாராட்டு!
வந்தே பாரத் அதிவிரைவு இரயில் விருத்தாசலத்தில் நின்று செல்ல வேண்டும் என்று பாராளுமன்றத்தில் கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் விஷ்ணு பிரசாத் எம்.பி.பேசிய பிறகு கடந்த 1 ந்தேதி முதல் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் எழும்பூர் -நெல்லை வந்தே பாரத் இரயில் நின்று செல்கிறது!.
அதற்கு பாராட்டு தெரிவிக்கும் கூட்டத்தில் வர்த்தக சங்கம் மாநில துணை தலைவர் பழமலை நகர தலைவர் கோபு நகர செயலாளர் மணிவண்ணன் நகர பொருளாளர் சேட்டு முகம்மது
முன்னாள் தலைவர் ஷண்முகம் மற்றும் ஷண்முக பிரபு மார்க்கெட் கமிட்டி சார்பில் ஹாஜி முகம்மது சுகுமார் பிரபு இளைஞர் அணி சார்பில் நிஷாந்த் மேலாளர் விஜயகுமார்
இரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் சுபம் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்