அ.ம.மு.க கூட்டணி நிலைப்பாடு குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை திருச்சியில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பேட்டி
அ.ம.மு.க கூட்டணி நிலைப்பாடு குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை, தொண்டர்களின் மன நிலையை அறிந்து மற்ற கூட்டணிகளின் நிலைப்பாடுகளை ஆராய்ந்து அதன் பின் முடுவெடுக்கப்படும்.
உங்கள் பார்வை திமுக பக்கம் திரும்புமா என்கிற கேள்விக்கு எங்கள் பார்வை யார் பக்கம் திரும்பும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.
கூட்டணி நிலைப்பாடு குறித்து எங்களுக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை அழுத்தம் கொடுத்தால் தலைவரை வேண்டுமானால் வலிக்கு கொண்டு வரலாம் ஆனால் தொண்டர்களை எதுவும் செய்ய முடியாது. எவ்வளவு பெரிய கட்சியாக இருந்தாலும் அன்போடும் மரியாதையோடும் அழைத்தால் தான் கூட்டணியில் இணைவார்கள்
நாகையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடைபெற்ற பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.