உலகிலேயே முதன்முறையாக சுகாதாரத் துறையில் ‘எப்போதும் திறந்திருக்கும். எப்போதும் இங்கே இருப்போம்’ (Always Open. Always Here.) எனும் முன்னோடி திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது அப்போலோ மருத்துவமனைகள்!
இந்தியாவிலேயே முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமைகளிலும் அனைத்து அப்போலோ மருத்துவமனைகளில் வழக்கமான மருத்துவ ஆலோசனைகள், உடல் நல பரிசோதனைகள், நோயறிதல் பரிசோதனைகள், அறுவை சிகிச்சைகள் மற்றும் திட்டமிடப்பட்ட சிகிச்சைகள் என அனைத்தும் இனி தடையின்றி கிடைக்கும்.
மதுரை, ஆகஸ்ட் 18, 2026: ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட வாரத்தின் அனைத்து 7 நாட்களிலும் வழக்கமான மற்றும் திட்டமிடப்பட்ட மருத்துவச் சேவைகளை வழங்கும் வகையில், 'எப்போதும் திறந்திருக்கும். எப்போதும் இங்கே இருப்போம்' என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னோடித் திட்டத்தை அப்போலோ மருத்துவமனைகள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
அப்போலோ மருத்துவமனைகளின் அவசரச் சிகிச்சை, தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) மற்றும் உள்நோயாளி சேவைகள் எப்போதும் 24 மணி நேரமும் தடையின்றி இயங்கி வருகின்றன. இந்த புதிய முயற்சியின் மூலம், வெளிநோயாளி ஆலோசனைகள் (OPD), நோயறிதல் பரிசோதனைகள், உடல் நல பரிசோதனைகள், தொடர் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் திட்டமிடப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் ஆகிய சேவைகள் இனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழுமையாக வழங்கப்படும்; இதனால் நோயாளிகளும் அவர்களது குடும்பத்தினரும் வாரநாட்களுக்காகக் காத்திருக்காமல் தங்களுக்கு வசதியான நேரத்தில் உரிய மருத்துவச் சிகிச்சையைப் பெற முடியும்.
நேரமின்மையும் அதிகரிக்கும் வாழ்க்கை முறை நோய்களும்:
பணிபுரியும் பல இந்தியர்களுக்கு, சரியான நேரத்தில் மருத்துவச் சேவைகளைப் பெறுவதற்கு 'நேரமின்மை' மிகப்பெரிய தடையாக உள்ளது. பரபரப்பான பணிச் சூழல், குடும்பப் பொறுப்புகள் மற்றும் வாரநாள் கடமைகள் காரணமாக மக்கள் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் உடல் நல பரிசோதனைகளைத் தள்ளிப்போடுகின்றனர். இதனிடையே, உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள் போன்ற வாழ்க்கை முறை நோய்களின் சுமை அதிகரித்து வருவதாகவும், இவை இந்தியர்களின் இளம் வயதிலேயே அவர்களைப் பெருமளவில் பாதிப்பதாகவும் அப்போலோவின் 'தேசத்தின் ஆரோக்கியம் 2026' (Health of the Nation 2026) அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்தியா முழுவதும் 2.5 மில்லியனுக்கும் அதிகமான நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சுகாதாரப் பரிசோதனைகளின் அடிப்படையில், வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் இல்லாதபோதிலும், லட்சக்கணக்கானோர் கண்டறியப்படாத நாள்பட்ட நோய்களுடன் வாழும் ஒரு 'அமைதியான தொற்றுநோய்' (Silent Epidemic) பரவி வருவதாக அந்த அறிக்கை எச்சரிக்கிறது. சோதனையில் பங்கேற்றவர்களில் எந்தவித அறிகுறிகளும் இல்லாதபோதிலும், கிட்டத்தட்ட 26% பேர் உயர் இரத்த அழுத்தத்தாலும், 23% பேர் நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இது, அறிகுறிகள் தோன்றிய பின் மட்டுமே மருத்துவமனைக்குச் செல்லும் பாரம்பரிய சிகிச்சை முறை இனி சாத்தியமில்லை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
அப்போலோவின் ‘எப்போதும் திறந்திருக்கும். எப்போதும் இங்கே இருப்போம்’ திட்டம், தாமதம் ஆபத்தாக மாறுவதற்கு முன்பாகவே நோயாளிகள் தங்கள் உடல்நலனில் கவனம் செலுத்தக் கூடுதல் ஒரு நாளை (ஞாயிற்றுக்கிழமை) வழங்குவதன் மூலம் இந்த இடைவெளியை முழுமையாக நிரப்ப முடிகிறது.
டாக்டர் பிரதாப் சி. ரெட்டி, நிறுவனர் மற்றும் தலைவர், அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் இது குறித்து கூறியதாவது "நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக, மருத்துவச் சேவை என்பது நோய்க்குச் சிகிச்சையளிப்பது மட்டுமல்ல, மாறாக ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதும் நோயைத் தடுப்பதும் ஆகும் என்று அப்போலோ நம்பி வருகிறது. ‘எப்போதும் திறந்திருக்கும். எப்போதும் இங்கே இருப்போம்’ என்பது அந்த உறுதிமொழியின் தொடர்ச்சியாகும். அவசர மற்றும் தீவிர சிகிச்சைகளுக்கு நாங்கள் எப்போதும் தயாராக இருந்து வந்துள்ளோம்; இப்போது அதே அர்ப்பணிப்புடன், வாரத்தின் ஏழு நாட்களும் வழக்கமான மற்றும் நோய் தடுப்புச் சிகிச்சைகளையும் வழங்குகிறோம். இது ஒவ்வொரு இந்தியருக்கும் நாங்கள் அளிக்கும் சேவையின் அடையாளமாகும்.
இந்த முன்னெடுப்பு, அப்போலோவில் உள்ள ஒவ்வொரு மருத்துவர், செவிலியர், தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் அர்ப்பணிப்பிற்கு நாங்கள் செலுத்தும் மரியாதையாகும். சரியான நேரத்தில் செய்யப்படும் ஒரு ஆலோசனை, நோயை முன்கூட்டியே கண்டறியவோ அல்லது ஒரு நெருக்கடியைத் தடுக்கவோ உதவினால், நாம் ஒரு உயிரையே காப்பாற்றியிருப்போம். நெருக்கடிக்கு முன்பே தடுப்புச் சிகிச்சையைத் தேர்ந்தெடுக்க லட்சக்கணக்கானோரை நாம் ஊக்குவித்தால், அது சமூகத்தின் எதிர்காலத்தையே மாற்றியமைக்கும்."
டாக்டர் பிரீதா ரெட்டி, நிர்வாகத் துணைத் தலைவர், அப்போலோ மருத்துவமனைகள் இது குறித்து கூறியதாவது "மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு வசதியான நேரத்தில் மருத்துவச் சேவைகளைப் பெறக்கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டும். பணிபுரியும் வல்லுநர்கள், குடும்பப் பொறுப்புகளைச் சுமப்பவர்கள் ஆகியோருக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மருத்துவர் ஆலோசனை, உடல்நலப் பரிசோதனை அல்லது தொடர் சிகிச்சைகள் கிடைப்பது பெரும் பயனளிக்கும். அப்போலோவின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ப, வாரத்தின் அனைத்து நாட்களிலும் உலகத்தர மருத்துவச் சேவையை வழங்குவதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்."
டாக்டர் நிகில் திவாரி, தலைமை நிர்வாக அதிகாரி, அப்போலோ மருத்துவமனைகள், மதுரை மண்டலம் இது குறித்து கூறியதாவது "குறிப்பிட்ட அட்டவணைகளுக்கு உட்பட்டு, ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு மருத்துவர் ஆலோசனைகள், நோயறிதல் பரிசோதனைகள் மற்றும் திட்டமிடப்பட்ட சிகிச்சைகளை நோயாளிகள் பெற முடியும். இதன் மூலம், பணிபுரியும் ஒருவர் வார நாட்களில் வேலைக்கு விடுப்பு எடுக்காமலேயே உடல்நலப் பரிசோதனையை மேற்கொள்ளலாம்; குடும்பத்தினர் வயதான பெற்றோரை சிரமமின்றி அழைத்து வரலாம்; தொடர் சிகிச்சைக்கான ஆலோசனைகளுக்காகத் திங்கட்கிழமை வரை காத்திருக்க வேண்டிய அவசியமும் இனி இருக்காது."
சமூகம் இயல்பாக ஏற்றுக்கொண்ட விஷயங்களுக்குச் சவால் விடுவதன் மூலமே சுகாதாரப் பாதுகாப்பில் மாற்றங்கள் சாத்தியமாகும் என்பதை அப்போலோ என்றும் நிரூபித்து வந்துள்ளது.
உயிரைக் காப்பாற்றும் இடத்தை 'விபத்துப் பிரிவு' (Casualty) என்று அழைப்பதற்குப் பதிலாக 'அவசரப் பிரிவு' (Emergency) என மறுவரையறை செய்தது. விமானப் பயணங்களில் புகைப்பிடிப்பதற்கு எதிராகக் குரல் கொடுத்து அதை முடிவுக்குக் கொண்டு வந்தது. அங்கீகரிக்கப்பட்ட மருந்தகங்களுக்கான தனித்துவமான 'பசுமை அடையாளத்தை' (Green Cross) உருவாக்கியது.
1983 முதல், இந்திய மருத்துவத் துறையில் முதன்முதலாகச் செய்யப்பட்ட சிக்கலான இதய அறுவை சிகிச்சைகள், தெற்காசியாவின் முதல் புரோட்டான் புற்றுநோய் மையம், 3 கோடிக்கும் அதிகமானோரின் வாழ்க்கையைத் தொட்ட 'மாஸ்டர் ஹெல்த் செக்' திட்டங்கள், உலகின் மிகப்பெரிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைத் திட்டங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவால் (AI) இயங்கும் 'அப்போலோ புரோஹெல்த்' (Apollo ProHealth) இடர் கணிப்புத் தொழில்நுட்பம் வரை அப்போலோ தொடர் மைல்கற்களைப் பதித்து வருகிறது. இன்று 150-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நோயாளிகள் அப்போலோவின் மருத்துவச் சேவைகளைப் பெற்று வருகின்றனர்.
தற்போது 'எப்போதும் திறந்திருக்கும். எப்போதும் இங்கே இருப்போம்' திட்டத்தின் மூலம், அப்போலோ தனது தற்போதைய அதிநவீன உள்கட்டமைப்பு, மருத்துவ நிபுணர்கள், நோயறிதல் மையங்கள் மற்றும் அறுவை சிகிச்சை அரங்குகளைப் பயன்படுத்தி, ஞாயிற்றுக்கிழமை மருத்துவச் சேவைகளையும் மிகவும் கட்டமைக்கப்பட்டதாகவும், நோயாளிக்கு உகந்ததாகவும் மாற்றியுள்ளது.
தரமான சுகாதாரச் சேவையை மேலும் சரியான நேரத்தில், எளிதில் அணுகக்கூடியதாகவும், நோயாளிகளை மையமாகக் கொண்டதாகவும் மாற்றுவதில் அப்போலோ மருத்துவமனைகள் மீண்டும் ஒரு உலகளாவிய வழிகாட்டியாகத் திகழ்கிறது.
சக்தி நீட் அகாடமி சார்பில்...
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் 33-வது நிறுவன நாள் மற்றும் உழவர் தின விழா...