85% வாக்குப்பதிவு என்பது இதுவரை தமிழகம் காணாத ஒன்று என விஜய் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான X பதிவில், தமிழக தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய தன் பாட்டி, அம்மா, சகோதரி என அனைத்து மக்களுக்கும் சிரம் தாழ்ந்த நன்றியை காணிக்கையாக்குவதாக குறிப்பிட்டுள்ளார். இவர்களுக்கெல்லாம் என்ன அரசியல் தெரியும் என்று ஏளனம் பேசியோருக்கு செயல் மூலம் பதிலடி தந்த கட்சி நிர்வாகிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.