திருச்சியில் நூறு சதவீதம் வாக்களிக்க வாக்காளர் உறுதிமொழி
நூறு சதவீதம் வாக்களிக்க
வாக்காளர் உறுதிமொழி
திருச்சி ஸ்ரீரங்கம் மக்கள் நலச் சங்கம், ஒயிட் ரோஸ் பொதுநல அமைப்பு, லட்சியம் படைப்பாளர் களம், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை,
ஸ்ரீரங்கம் நகர நல சங்கம்
இணைந்து தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - 2026 நூறு சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி திருவரங்கம் பகுதியில் சமூக செயற்பாட்டாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மேற்கொண்டனர்.
நிகழ்வில்,
தேசம் காக்க வாக்களிப்போம், நூறு சதவீதம் அனைவரும் வாக்களிப்போம், வாக்களிப்பதில் பெருமை கொள்வோம், இந்திய ஜனநாயகத்தில் பங்குபெறுவோம், வாக்களிப்பதில் உறுதி கொள்ளுங்கள், என் வாக்கு விற்பனைக்கு அல்ல, என் வாக்கு என் உரிமை உள்ளிட்ட தோ்தல் விழிப்புணா்வை எடுத்துரைத்து,
ஜனநாயகத்தின் மீது பற்றுறுதி கொண்ட இந்தியக் குடிமக்களாகிய நாம், நம் நாட்டின் ஜனநாயக மரபுகளைப் பேணிக் காப்போம் என்றும், சுதந்திரமான, நேர்மையான மற்றும் அமைதியான தேர்தல்களின் கண்ணியத்தை நிலைநிறுத்துவோம் என்றும், மேலும், ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி அல்லது எந்தவிதமான தூண்டுதலுக்கும் ஆட்படாமலும், நேர்மையுடன் வாக்களிப்போம் என்றும் உறுதியளிக்கிறோம்" என
ஸ்ரீரங்கம் மக்கள் நல சங்கம் தலைவர் மோகன்ராம், செயலர் மிலிட்டரி நடராஜன், சமூக ஆர்வலர் எழில் ஏழுமலை, லட்சியம் படைப்பாளர் களம் நிறுவனர் சதாசிவம், ஒயிட் ரோஸ் பொதுசேவை அமைப்பு சங்கர், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், ஸ்ரீரங்கம் நகர நல சங்க தலைவர் சுரேஷ், வெங்கடாசலம், ஒருங்கிணைப்பாளர் அனிருத், அரிமா ஸ்ரீதர், ரயில்வே முருகேசன், சமூக ஆர்வலர் ஜெயந்தன் உட்பட பலர் உறுதிமொழி ஏற்றனர்.