திருச்சியில் வெறும் நீர் தேக்க தொட்டியால் சாலை மறியல்...
திருச்சிராப்பள்ளி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் மருதண்டாகுறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியான மாரியம்மன் கோயில் தெருவில் நீர் தேக்க தொட்டியின் மோட்டார் பழுது காரணமாக நீண்ட நாட்களாக தண்ணீர் வரவில்லை என்றும் இதில் வரும் தண்ணீரை வைத்து 40 குடும்பம் பயன் பெற்று வருவதாகவும் , இது சம்பந்தமாக பிடிவோவிடம் பலமுறை புகார் கொடுத்ததாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர் .
தொடர்ந்து பஞ்சாயத்து கிளர்க் சுரேஷ் என்பவர் தினமும் வந்து வந்து பார்த்துவிட்டு செல்கிறார் வேலை ஒன்றும் நடக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர். தெருவாசிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இன்று 02/09/26 காலையில் வெறும் குடத்துடன் குழுமணி வழியாக சத்திரம் செல்லும் குழுமணி மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி வாகனங்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர் . இதனால் சிறிது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து காவல்துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை அப்புறப்படுத்தினர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நேரில் வந்து பணியை விரைந்து முடித்து தருவதாகவும் கூறியுள்ளனர். இதனால் பொதுமக்கள் அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றனர்.