திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளராக போட்டியிட கே.என்.நேரு விருப்பமனு தாக்கல்
இன்று 02/03/26 சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திராவிட முன்னேற்ற கழக தலைமை அலுவலகத்தில் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் வேட்பாளராக போட்டியிட அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம்விருப்பம் மனு அளித்தார். அருகில் பெரம்பலூர் பாராளுமன்ற எம்பி அருண் நேரு ,மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், பொருளாளர் துரைராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் மாத்தூர் கருப்பையா காஜாமலை விஜய், டோல்கேட் சுப்பிரமணி உட்பட பலர் இருந்தனர்.