கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில்திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திரு.ரெ.மகேஷ் அவர்கள் தலைமையில் நாகர்கோவில் A.R கேம்ப் ரோட்டில் நடைபெற்றகழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நாகர்கோவில் மாநகர கிழக்கு மண்டல தலைவர் திருமதி. அகஸ்டினா கோகிலவாணி அவர்கள் ஏற்பாட்டில் 1049 நபர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கழக துணைப்பொது செயலாளர் திரு.திருச்சி சிவா M.P. அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார்.உடன் மாநகர செயலாளர் ஆனந்த், செயற்குழு உறுப்பினர் திரு.சதாசிவம் மற்றும் மாநகர, ஒன்றிய, பேரூர், பகுதி கழக செயலாளர்கள், சார்புஅணி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.