அலைகள், அத்திப்பூக்கள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ராணி, பண மோசடி புகாரில் சிக்கியுள்ளார். கரூரில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவரிடம் ₹10 லட்சம், கார் உள்ளிட்டவற்றை அவர் மோசடி செய்திருப்பதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதில், பண மோசடி, கொலை மிரட்டல் பிரிவுகளில் ராணி, அவரது கணவர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, தலைமறைவாகியுள்ள ராணியை போலீஸ் தேடி வருவதாக கூறப்படுகிறது.